Categories
திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சுர்ஜித்தை ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்கும் பணி தீவிரம்…!!

மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தை சுர்ஜித்தை ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்கும் முயற்சியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் வீட்டுத் தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் நேற்று (அக்.25) மாலை 5.40 மணிக்கு ஆழ்துளைக் கிணற்றுக்குள் விழுந்தது. சிறுவனை மீட்கும் பணி 22 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கிறது.குழந்தை 80 அடி ஆழத்திற்கு சென்றுவிட்ட நிலையில், மீட்புப் பணி தொடர்கிறது.

இதனிடையே, குழந்தை சுஜித்தை கை போன்ற அமைப்புடைய ஹைட்ராலிக் கருவி மூலம் தூக்க முயற்சி நடந்துவருகிறது.ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை மீட்க வேண்டி தமிழ்நாடு முழுவதும் பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. மேலும், சிறுவன் சுஜித்தை மீட்கும் போராட்டத்தில் ஆறு தன்னார்வ குழுக்களும் ஆராய்ச்சி மாணவர்களும் உதவி செய்துவருகின்றனர்.

Categories

Tech |