‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் புதிய ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஜெய் பீம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இவர் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடிக்கின்றனர். மார்ச் 10ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்தின் புதிய ப்ரோமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். எமோஷனலான இந்த புரோமோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Emotions from the world of #EtharkkumThunindhavan @Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #ETpromo3 #ETfromMarch10 pic.twitter.com/vcAx4xTjKF
— Sun Pictures (@sunpictures) March 5, 2022