சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்தின் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யா தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகராக வலம் வருகிறார். இவர் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ”ஜெய் பீம்” படத்தில் நடித்துள்ளார். பிரகாஷ்ராஜ், ராவ்ரமேஷ், ராஜிஷாவிஜயன், மணிகண்டன் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை 2d நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும், இந்த திரைப்படம் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் வெளியாக உள்ளது. சமீபத்தில், இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் சூர்யா வக்கீலாக நடித்திருக்கிறார். இந்நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகும் நாள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்தின் ட்ரைலர் அக்டோபர் 22 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
A verdict is all that is needed to make the tables turn! ✍🏼
Will @Suriya_offl make it happen? Trailer out on Oct 22.Watch #JaiBhimOnPrime, Nov 2.#Jyotika @tjgnan @prakashraaj @RSeanRoldan @srkathiir @KKadhirr_artdir @philoedit @rajisha_vijayan #Manikandan @jose_lijomol pic.twitter.com/WIaqPWRAeQ
— prime video IN (@PrimeVideoIN) October 20, 2021