Categories
மாநில செய்திகள்

சூர்யாவின் கருத்தை “ஆதரிக்கிறேன்,வரவேற்கின்றேன்” திருநாவுக்கரசர் MP …!!

சூர்யாவின் கருத்தை நான் ஆதரித்து , வரவேற்கின்றேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா  நடத்தும் அகரம்  அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய தேசிய கல்வி கொள்கையை கடுமையாக விமர்சித்து பேசினார். புதிய கல்வி கொள்கையால் கிராமப்புறங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது , பஸ் வசதி இல்லாத கிராமபுற மாணவர்கள் நகர்ப்புறங்களுக்கு சென்று படிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டு  , படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலைமை இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

Image result for actor suriya

மேலும் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்து பேசிய சூர்யாவின் கருத்துக்கு அதிமுக , பாஜக ஆகிய கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்தன. அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜீ சூர்யா பேச்சு அரைவேக்காடு தனமாக இருக்கின்றது என்று கூறினார். சூர்யாவின் கருத்து தமிழக அரசியல் மேடைகளில் விவாதப்பொருளாக மாறியது. ஆளும் அதிமுக , பாஜக எதிர்ப்பு தெரிவித்தாலும் பல்வேறு அமைப்புகள் சூர்யாவிற்கு ஆதரவாக பேசினர்.

Image result for திருநாவுக்கரசர்

நடிகர் கமல் , ரஜினி உட்பட பலரும் ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில்  இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவரும் , திருச்சி மக்களவை உறுப்பினருமான  திருநாவுக்கரசர் சூர்யாவின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ,  நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லோரும் ஆதரிக்கக்கூடிய கருத்து.  எனவே நானும் ஆதரிக்கிறேன்.  அதனை வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |