கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் நடிகர் சூர்யா வீடியோ வெளியிட்டுள்ளார்.
இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்ஸை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு பிரபலங்களும் இது குறித்து விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனா விழிப்புணர்வு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் அதில்
கொரோனா வைரஸ் நாம் நெனச்சதை விட, ரொம்ப வேகமாக பரவிக் கொண்டு இருக்கின்றது. நாம பரப்ப வேண்டிய ஒரே விஷயம் விழிப்புணர்வு தான். வெள்ளம் , புயல், ஜல்லிக்கட்டு என்று ரோட்டில் இறங்கி போராடிய நாம், இப்போது வீட்டிற்குள் இருந்தே போராடணும். சைனா விட இத்தாலியில் கொரோனாவால் அதிகமான உயிரிழப்பு நடந்திருக்கிறது.
இதற்க்கு காரணம் அறியாமையால் வெளியே சுத்திய அப்பாவி மக்கள் தான். இந்தியா இன்னொரு இத்தாலியாக மாறிவிடக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கிட்ட இருந்து ஒரு மீட்டராவது விலகி இருக்குன்னு சொல்றாங்க. வெளியே போய்விட்டு வந்தா கை, கால் கழுவனும்னு சொல்றாங்க. கழுவாத கையால் தெரியாம கூட முகத்தை தொட்டுவிட வேண்டாம்னு சொல்றாங்க.
எல்லா இருமலும், எல்லா காய்ச்சலும் கொரோனா கிடையாது. இருந்தாலும் ஒரு அஞ்சு நாள் , ஆறு நாள் பாத்துட்டு , தனிமைப்படுத்திகிட்டு, அஞ்சு , ஆறு நாளுக்கு மேல இருந்துச்சுன்னா, மருத்துவர்களை அணுக சொல்கிறார்கள். ரோட்ல , பஸ்ஸில , இரயிலில் அலுவலகத்துக்கு போறவங்க, இறை வழிபாட்டு தலங்களுக்கு போடுறவங்க, ஹாஸ்டலுக்கு போறவங்க கூட ரொம்ப ரொம்ப அத்தியாவசியம் என்றால் மட்டும் போங்க.
இல்லையென்றால் தயவு செய்து வெளியே போக வேண்டாம். கூட்டம் கூட்டமாக போறதுக்கு இது ஒன்னும் விடுமுறை கிடையாது. பாதுகாப்பாக குடும்பத்தோடு இருக்க வேண்டிய நேரம்.பத்து நாட்களில் 150 ஆக இருந்த பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 250ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே இருப்பதாக அரசு அதிகாரிகளும், மருத்துவர்களும் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்காங்க.
பாதிக்கப்பட்ட ஒருவர் தன்னை தனிமைப்படுத்தி கொள்ளாமல் ஒரு ரயிலிலோ இல்லை கல்யாணத்திற்கோ அல்ல பொது நிகழ்ச்சிக்கோ போனா அவர சுத்தி இருக்குற அத்தனை பேரும் பாதிக்கப்படுவார்கள்.அப்படி ஒரு மன்னிக்க முடியாத தவறு நீங்க செய்யமாட்டிங்கனு எனக்கு நம்பிக்கை இருக்கு. நமக்காகத்தான் மருத்துவர்களும் , அரசு அதிகாரிகளும், துப்புரவு தூய்மை பணியாளர்களும் தங்களுடைய உயிரை பணயம் வைத்து நமக்காக வெளியில் வேலை செஞ்சுட்டு இருக்காங்க.
நமக்காக அவங்க வெளிய இருக்காங்க, அவங்களுக்கு நாம வீட்டிலேயே சுகாதாரமாய் இருக்கலாமே? அஞ்சுவது அஞ்சாமை பேதமை பயப்படுற விஷயத்திற்கு பயப்படாமல் இருப்பது முட்டாள்தனம் சொல்லுவாங்க. இந்த விழிப்புணர்வ எல்லாருக்கும் பரப்புவோம். குறிப்பா குழந்தைகளையும், பெரியவர்களையும் பாதுகாப்பா வச்சுப்போம். கொரோனா வைரஸை தடுப்பதற்கு அடுத்த ரெண்டு வாரம் ரொம்பா முக்கியமானதுனு சொல்லுறாங்க. எச்சரிக்கையோட இருப்போம் வருமுன் காப்போம் என்று சூர்யா விழிப்புணர்வு வீடியோவில் தெரிவித்துள்ளார்.
Let's all stay home and stay safe🙏#IndiaFightsCorona@Vijayabaskarofl @TNDeptofHealth @MoHFW_INDIA pic.twitter.com/q2BuBYDvvU
— Suriya Sivakumar (@Suriya_offl) March 22, 2020