Categories
சினிமா தமிழ் சினிமா

”சாதிப்பாரா சூர்யா” சரவணன் முதல் காப்பான் வரை …… !!

நடிகர் சூர்யா_வின் காப்பான் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது.

பிரபல திரைப்பட நடிகரின் மகன் ஒரு தமிழ் திரைப்பட இயக்குனர் நடிக்க அழைத்தபோது எனக்கு பயமாயிருக்கு என கூறி வாய்ப்பை மறுத்த இளைஞன் என்று இவரைப் போல நடிக்க முடியுமா என பலரையும் புருவம் வைத்த உயிர் புருவம் உயர்த்த வைத்துள்ள நடிகன் சரவணன் என்கிற சூர்யாபிரபல திரைப்பட நடிகர் சிவகுமாரின் மகன் சரவணன்.

 

சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை வணிகவியல் படிப்பை முடித்து அப்பாவின் பெயரையும் , புகழையும் பயன்படுத்தி அனுகூலம் அடைந்து விடக்கூடாது என கருதி ஒரு ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்து அதில் கிடைத்த முதல் மாத சம்பளத்தில் தனது அம்மாவுக்கு புடவை வாங்கிக் கொடுத்த  1990களின் சாமானிய இளைஞன்தான் சரவணன்.

அவரின் இளம் பருவத்திலிருந்தே இயக்குனர் வசந்த் அவரை கூர்ந்து கவனித்து வந்துள்ளார். ஆசை படத்தை இயக்குவதற்கான முன் தயாரிப்புப் பணிகளில் இருந்த வசந்த் இந்த படத்தில் புதுமுக நாயகன் நடித்தால் நன்றாக இருக்கும் என கருதி சிவக்குமாரிடம் உங்கள் மகன் சரவணன் நடிப்பாரா ? என கேட்கிறார். அதற்கு சிவகுமார் அதை அவளிடமே கேளுங்கள் என்று சொன்னதும் வசந்த் சரவணனிடம் கேட்கையில் சரவணனோ எனக்கு பயமா..!! இருக்கு சார் வேண்டாம் என கூறி மறுத்து விடுகிறார்.

அதன்பின் அப்படத்தில் அஜித் நடிக்க ஆசை படம் அஜித் கான அடையாளமாக மாறியதையும் தமிழ் திரைப்பட ரசிகர்கள் நன்கு அறிவார்கள். ஆசைக்கு பின் மணி ரத்னம் தயாரிப்பில் நேருக்கு நேர் படத்தை இயக்க முடிவு செய்து ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தம் செய்தார்.வேறு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மீண்டும் சரவணனிடம் கேட்கிறார்கள் சரவணனும் ஒப்புக்கொள்ள அதே பெயரில் ஒரு நடிகர் இருப்பதால் மணிரத்தினம் , வசந்த் இருவரும் சிவக்குமாரிடம் கலந்தாலோசித்தனர். அதன் விளைவாக சரவணன் சூர்யாவாக மாறினார்.

ஏன் என் பையன் நடிக்க என்னிடம் கேட்கிறீர்கள் என நடிகர் சிவகுமாரிடம் இயக்குனர் கேட்க சார் நீங்க வரைந்தது தலைசிறந்த ஓவியம் உங்க பையன் தான் , அவர் கண்ணுல ஒரு ஈர்ப்பு இருக்கு. அது கண்டிப்பா பெண்களுக்கு பிடிக்கும் என நினைக்கிறேன் என வசந்த் கூறியிருக்கிறார். நேருக்கு நேர் படம் வெளியாகி சூர்யாவுக்கு பல விமர்சனங்களை வழங்கியது.

 

ஒரு திரையரங்கில் சூர்யா படம் பார்த்துவிட்டு வெளியே வந்த போது ஒரு ரசிகர் நேரடியாக நீங்களெல்லாம் ஏன் நடிக்க வந்தீர்கள். இனிமேல் நடிக்காதீங்க என கூறியிருக்கிறார்.சூர்யாவுக்கு சரியாக நடமாட தெரியாது , சண்டை போட தெரியாது , நடிக்க தெரியாது , என அவரை சுற்றி பல விமர்சனங்கள் அதன் பின் அவர் நடித்த படங்களும் பெரும் தோல்வியையும், விமர்சனங்களை அவருக்கு வழங்கியது.

பின்னர் மீண்டும் வசந்த் இயக்கத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடிக்க தொடங்கினார் சூர்யா. இப்படத்தில் ஜோதிகாவும் , சூர்யாவும் முதல் முறையாக சேர்ந்து நடித்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்தார். யுவனின் பாடல்களே இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்படுத்தியது.இப்படத்தில் இடம் பெற்ற எல்லா பாடல்களும் இன்று வரை திரும்ப , திரும்ப கேட்கக் கூடியவை.

படம் வெளியாகி வர்த்தகரீதியாக வெற்றி அடையாவிட்டாலும் , யுவனின் பாடல்கள் சூர்யாவை எல்லா வீடுகளுக்கும் கொண்டு சேர்த்தது தனக்குரிய வெற்றி நிச்சயம் கிடைத்தே ஆகவேண்டும் என காத்துக் கொண்டிருந்த சூர்யா அந்த சமயத்தில் சேது படத்தின் இயக்குனர் பாலாவிடம் தனக்கு உங்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுங்கள் என கேட்டிருக்கிறார்.சூர்யாவை வைத்து நந்தாவை தொடங்கினார்.இதற்கிடையில் சூர்யா மீண்டும் விஜய்யுடன் சேர்ந்து பிரண்ட்ஸ் படத்தில் நடித்தார்.

இப்படம் பெரும் வெற்றி பெற்றாலும் அவற்றை விஜயின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது.சூர்யா மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த நந்தா நவம்பர் 14_ஆம் தேதி 2001 இல் வெளியானது. இதுவரை சாக்லேட் பாயாக இருந்த சூர்யாவை முரட்டு இளைஞனாக மாற்றியிருந்தார் பாலா. சூர்யாவின் கண் புருவம் , உடல்மொழி , வசன உச்சரிப்பு என எல்லாவற்றிலும் மாற்றம் இருந்தது. நந்தா புதிய சூர்யாவை தமிழ் சினிமாவிற்கு காட்டியது.

நந்தா படத்தின் இறுதி காட்சியில் தன் அம்மா தனக்கு ஊட்டுவது விஷம் என தெரிந்தும் நீண்ட நாட்கள் கழித்து தாயின் கையால் சாப்பிடுவது பாக்கியம் என கருதி அதை சாப்பிட்டால் இறந்து போகும் காட்சியில் தான் நல்ல நடிகன் என்பதை நிரூபித்தார் சூர்யா.இதுவரை சூர்யாவை தேடி காத்துக்கொண்டிருந்த மற்றும் பேசிக்கொண்டிருந்த ஊடகங்கள் சூர்யாவின் நடிப்பை , அவரின் உடல் மொழியை என சின்ன சின்ன அசைவுகளையும் கவனித்து பாராட்டினார். தமிழக அரசு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி கௌரவித்தது.

சூரியா நீண்டநாள் எதிர்பார்த்துக் காத்திருந்த அவருக்கே அவருக்கான வெற்றியை நந்தா வழங்கியது. அதை தொடர்ந்து  சூர்யா நடித்த மௌனம் பேசியதே படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை தொடங்கினார் சூர்யா.த்ரிஷாவுடன் காதல் காட்சி , திரிஷா தன்னை காதலிக்கவில்லை என்று தெரிந்து ஏமாறும் கட்சி , நண்பர்களுடனான நட்பு காட்சி என சூர்யா நடிப்பில் தன் முத்திரையை பதித்தார்.இதை அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க படம் 2003 இல் வெளியானது.

அன்புச்செல்வன் ஐபிஎஸ் போலீஸ் ஆதிகாரியாக பாண்டியா உடன் மோதுவதும், மாயாவுடன் காதலில் மயங்குவதும் கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக பொருந்தி போனது.  நடிப்பில் அசத்தினார் சூர்யா. படம் வெளியாகி ஒரு வாரம் இருக்கும் அதிகாலை 5 மணியளவில் கௌதம் மேனன் சூர்யாவிற்கு போன் செய்து சத்தியம் , தேவி , உதயம் எல்லாத்துக்கும் ஒரு ரவுண்டு போயிட்டு வாங்க என கூறியிருக்கிறார். 11 மணிக்கு தானே படம் என்று சூர்யா சொல்ல முதல்ல கிளம்பி போங்க என சொல்லி இருக்கிறார்.

காலை 5 மணிக்கு தன் படத்துக்கு டிக்கெட் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்த ரசிகர்களை கண்டு சூர்யாவுக்கு ஆச்சரியமும் , ஆனந்தமும் அதில் ஒரு ரசிகர் இன்னைக்கு முழுவதும் தூங்கவே இல்லை என்று சொல்லி இருக்கிறார். அப்போது சூர்யாவிற்கு நேருக்கு நேர் படதின் போது திரையரங்க வாசலில் அப்போது ஒரு ரசிகர் பேசியதும் நிச்சயம் நினைவுக்கு வந்திருக்கும். காலம் அற்புதங்கள் நிறைந்தது , மீண்டும் பாலாவின் இயக்கத்தில் பிதாமகன் படத்தில் சக்தியாக நடித்தார் சூர்யா.விக்ரம் என்ற மகா நடிகன் போட்டி போட்டு நடித்து இருந்தார்.

இதில் லைலா_வுடன் மூணு சீட்டு விளையாடி கைக்கடிகாரத்தை பிடுங்குவது , ரயிலில் ஏறி சோப்பு டப்பா , லைலாவிடம் பிடுங்கிய  கைக்கடிகாரத்தை ஏலம் விடுவது , சித்தனுக்குகாக கஞ்சா வியாபாரியை எதிர்ப்பது என  நடிப்பில் பல பரிமாணங்களை இப்படத்தில் காட்டினார். இப்படம் சூர்யாவுக்கு பல தரப்பினரின் பாராட்டையும் பெற்றுத் தந்தது.2005 ஆம் ஆண்டு கஜினி படத்தின் மூலம் ஏ ஆர் முருகதாஸ் உடன் கைகோர்த்தார் சூர்யா. மறதி நோயால் அவதிப்படும் சூர்யா தான் சஞ்சய் ராமசாமி என்பதை அசினிடம் மறைத்து பழகும் காட்சிகளில் காதல் நாயகனாகவும் வென்றார்.

இதை தொடர்ந்து இயக்குனர் ஹரி உடன் இணைந்து ஆறு , வேல் என கமர்ஷியல் படங்களை  தனதாக்கினார். மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த வாரணம் ஆயிரம் படம் 2008 இல் வெளியானது.அப்பா கிருஷ்ணனாகவும், மகன் சூர்யாவும் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்தார் சூர்யா. பள்ளி மாணவன் முதல் வயதான முதியவர் வரை அவரது கதாபாத்திரங்கள் இப்படத்தில் இருந்தது. அதற்காக தனது உடலை வருத்தி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் அவருக்கு பெரும் பாராட்டுகளையும், விருதுகளையும் பெற்றுத் தந்தது.

இதன் பின் கேவி ஆனந்த் இயக்கத்தில் அயன் ,  ஹரி இயக்கத்தில் சிங்கம் என பெரும் கமர்சியல் படங்களை தன தாக்கினார்.விஜய்-அஜித் படங்களுக்கு இணையாக அவரின் படங்களும் வசூலை பெற்றன. சூர்யா இந்த  இடத்தை அடைவதற்கு பாலா , கௌதம் வாசுதேவ மேனன் ,  முருகதாஸ் ஹரி போன்ற இயக்குநர்களும் , யுவன் சங்கர் ராஜா , ஹாரிஸ் ஜெயராஜ் போன்ற இசையமைப்பாளர்களும் மிக முக்கிய காரணிகளாக இருந்துள்ளனர் என்பதை தமிழ் சினிமா உலகமும் , சூர்யாவும் மறுக்க முடியாது.

ஒருமுறை நடிகர் மோகன் , ஹாரிஸ் ஜெயராஜுக்கு உங்களுக்கும் அப்படி என்ன கெமிஸ்ட்ரி என கேட்க உங்களுக்கும்,  இளையராஜாவுக்கும் என்ன கெமிஸ்ட்ரியோ அதுதான் எனக்கும் எனக் கூறினார் சூர்யா.துருவ நட்சத்திரம் படத்தில் கௌதம் மேனனுடனான மன கசப்புக்கு பிறகு மீண்டும் நட்பாகி உள்ளார் சூர்யா. திரைப்படத்தில் நாயகனாக நல்ல விஷயங்களை செய்பவராக இருப்பதோடு மட்டுமல்லாமல் சமூக வாழ்விலும் பல நல்லவைகளை அகரம் அறக்கட்டளை மூலம் செய்து வருகிறார். சமூகம் சார்ந்த விஷயங்களுக்கு அவ்வப்போது குரல் கொடுக்கிறார்.

சமீபத்தில் புதிய கல்விக் கொள்கை குறித்து அவர் பேசிய கருத்து அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சைகளை உருவாக்கியது. சினிமா , சமூகம் இவை இரண்டிற்கும் இடையில் நல்ல மகனாக , கணவனாக , அண்ணனாக , அப்பாவாக இந்த சமூகத்தால் அறியப்படுகிறார் சூர்யா. சினிமா , சமூகம் , குடும்பம் என தன்னால் இயன்ற அளவிற்கு நல்ல பங்களிப்பை வழங்கி வருகிறார் சூர்யா.

சிங்கம் படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு சூர்யாவின் அடுத்த படங்களான ஏழாம் அறிவு , மாற்றான் , சிங்கம்-2 , அஞ்சான் , மாசு என்கிற மாசிலாமணி , 24 , சிங்கம்-3 , தானா சேர்ந்த கூட்டம் என்ஜிகே என எல்லா படங்களும் பெரும் வெற்றியைப் பெற தவறியது . கண்டிப்பாக ஒரு பெரும் வெற்றியை நோக்கிய சூழலில் சூர்யா இருக்கிறார். ஒரு கட்டத்தில் கே.வி ஆனந்த் எப்படி அயன் எனும் பெரும் வெற்றிப் படத்தை வழங்கினாரோ , அப்படி ஒரு வெற்றியை இம்முறை காப்பான் மூலம் வழங்குவார் என காத்திருக்கிறார் சூர்யா. சூர்யாவும் , அவரது தந்தை சிவக்குமாரும் அதிகம் உச்சரிக்கும் வரிகள் இதுவும் கடந்து போகும் , மாற்றம் ஒன்றே மாறாதது.

Categories

Tech |