ஆங்கிலப் புத்தாண்டு பிறக்க உள்ள நிலையில் சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் தங்கள் வாழ்த்துகளை மக்களுக்குத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரன் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில் இதுவரை நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
2020ஆம் புத்தாண்டிலாவது யாரும் விபத்தினால் மரணம் அடையக்கூடாது என்று அறிவுறுத்திய அவர் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் தங்களை உயரத்தில் தூக்கிப் பிடித்திருக்கும் ரசிகர்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என அவ்வேண்டுகோளில் தெரிவித்தார்.