சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பல திடுக்கிடும் புதிய நிகழ்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நடிகர் சுஷாந்த் சிங், மும்பையில் சென்ற ஜூன் மாதம், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், இது தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை, சுஷாந்தின் காதலி ரியா, தந்தை, குடும்பத்தினர், நண்பர்கள், உடன் பணியாற்றிய இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், என ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
இந்நிலையில், சுஷாந்த் இறப்பதற்கு முன் தனது பெயரை, கூகுளில் தேடி அது பற்றிய கட்டுரைகளை படித்தாகவும், மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவது எப்படி என்பது குறித்து படித்ததாகவும் மும்பை போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும், அவரது மேலாளர் திஷா சாலியன், தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது பெயரையும், சுஷாந்த் கூகுளில் தேடியதாக மும்பை போலீசார் கூறியுள்ளனர்.
அதுமட்டுமின்றி தான் இறப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு வலியில்லாமல் தற்கொலை செய்துகொள்வது எப்படி? என கூகுளில் தேடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. நடிகர் சுஷாந்த் சிங், பைபோலார் டிஸார்டர் எனும் மன அழுத்த நோய்க்கு, மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்ததாகவும் மும்பை போலீசார் தெரிவித்து இருக்கின்றனர். மேலும் சுஷாந்த்தின் வங்கி கணக்கிலிருந்து அவரது காதலி ரியா, ரூ.15 கோடி பண பறிமாற்றம் செய்து இருப்பதாக கூறிய புகார் முற்றிலும் தவறு என்றும், மும்பை போலீசார் கூறியுள்ளனர்.