சுஷாந்த் சிங்கின் தற்கொலை வழக்கு தொடர்பாக அவருடைய காதலி ரியாவிடம் சிபிஐ 9 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.
பிரபல நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், அவருடைய காதலி ரியா போதைப்பொருள் சம்பந்தப்பட்ட நபர்களுடன் கூட்டு வைத்திருப்பதாகவும் சந்தேகத்தின் அடிப்படையில் ரியா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மும்பையின் சாந்தாக்ருஸ் (Santacruz) பகுதியில் உள்ள டிஆர்டிஓ விருந்தினர் இல்லத்தில் வைத்து ரியாவிடம் சிபிஐ அதிகாரிகள் நேற்று ஒன்பது மணி நேர விசாரணையை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், சிபிஐ அதிகாரிகள் பல கேள்விகளை கேட்டதாகவும், சுசாந்தின் தற்கொலைக்கு தான் காரணம் இல்லை என ரியா கூறியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் 4வது நாளாக, ரியாவின் தம்பியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதுமட்டுமில்லாமல், சுசாந்தின் மேலாளர் சாமுவல் மிராண்டா மற்றும் உதவியாளர் கேசவ் ஆகியோரும் நேற்று விசாரணைக்கு ஆஜராகி தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். இதற்கிடையில், 4வது நாளாக இன்றும் ரியாவிடம், சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.