சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் பிரியா சக்ரபோர்த்தி மீது போதைப் பொருள் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
டெல்லி மற்றும் மும்பையைச் சேர்ந்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் 3 பேர் கொண்ட குழு இந்த போதைப்பொருள் விவகார வழக்கை விசாரணை செய்ய உள்ளது. இந்த வழக்கில் ரியா மற்றும் சோவிக் இவர்களைத் தவிர, ஜெய சஹா, சுருதி மோடி மற்றும் புனேவை சேர்ந்த போதை பொருள் விற்பனையாளரான கவுரவ் ஆர்யா என்பவரையும் விசாரணைக்குள் கொண்டு வரவுள்ளனர். ரியா சக்ரபோர்த்தி, அவரது சகோதரர் சோவிக் சக்ரபோர்த்தி மற்றும் பிறர் மீது போதை பொருள் கட்டுப்பாட்டு துறை, போதை பொருள் ஒழிப்பு சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் விசாரித்தபோது, ரியாவின் மொபைல் போனில் இருந்து ஜெய சஹாவுக்கு அனுப்பிய வாட்ஸ்அப் தகவல் அடிப்படையில் , எம்.டி.எம்.ஏ., மரிஜுவானா மற்றும் பிற தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ரியா பயன்படுத்தியது தெளிவாக தெரிந்தது. இதனால் நடிகை ரியாவை விசாரணைக்கு வரவழைக்க சம்மன் அனுப்ப இருப்பதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் திட்டமிட்டுள்ளனர்.