Categories
சினிமா பல்சுவை

பின்னணி இல்லாமல் வளர்ந்தவர்…. ஒரே படத்தில் பிரபலமானவர்…. சுஷாந்த் சிங் வரலாறு…!!

சுஷாந்த் சிங் பிறந்தநாளை முன்னிட்டு அவர் பற்றிய சிறப்பு தொகுப்பு. 

இந்தியாவின் பீகார் மாநிலத்தை சேர்ந்த பாட்னா என்ற ஊரில் 4 பெண் குழந்தைகளுக்கு பிறகு ஒரு அழகான குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையா அதுவும் ஒரு ஆண் குழந்தையாக பிறந்தார் சுஷான் சிங் ராஜ்புட். அவருடைய இளமை காலத்தில் அவருடைய குடும்பத்தில்  மிகவும்  செல்லப் பிள்ளையா இருந்ததற்கு காரணம் அவர் நான்கு பெண் பிள்ளைகளுக்கு பின் பிறந்த ஒரே ஒரு ஆண் குழந்தை என்பதால் தான். அவருடைய நான்கு சகோதரிகளில் ஒரு சகோதரி ஸ்டேட் லெவல் கிரிக்கெடராக இருக்காங்க. சின்ன வயசுல இருந்தே சுஷான் சிங் ராஜ்புட் அதிக அறிவுத்திறன் மிக்கவராக இருந்தார்.

சுஷாந்த் தனது பதினாறாவது வயதில் மிகப்பெரிய ஒரு துயரமான சம்பவத்தைப் சந்திக்கிறார். அதுதான் அவருடைய அம்மாவினுடைய இழப்பு. அதிலிருந்து மீளுவதற்கு அவருக்கு அதிக காலம் தேவைப்பட்டுள்ளது.  2002ஆம் ஆண்டு அவரது தந்தை புதுடெல்லிக்கு அழைத்து சென்றார். அங்கு சுஷாந்த் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்க வேண்டும் என்று முடிவு செய்து ஒரு கல்லூரியில் சேர்ந்து படிக்கிறார். அதோடு நடன பள்ளி ஒன்றிலும் சேர்ந்துள்ளார்.  அங்கு சீக்கிரமாவே நடனத்தை எளிமையாக கற்றுக்கொள்கிறார்.

 அவர் ஒரு நல்ல டான்ஸர் என்ற மிகக்குறுகிய காலத்திலேயே அங்கே இருக்கிறவர்களுக்கு புரியவைக்கிறார். அதன் பிறகு ஏராளமான நடன நிகழ்ச்சிகளில் பங்குபெருவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.  பின்னர் நடிப்புத் துறையை தன்னுடைய வாழ்க்கையின் அடுத்த பாகமாக தேர்ந்தெடுக்கிறார். அதற்காக கடினமாக உழைத்தார். அதில் அவருக்கு கிடைத்த முதல் வாய்ப்புதான் டிவி சீரியலுக்கான  வாய்ப்பு. அதனையடுத்து அவருடைய பேர் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. ஆனாலும்கூட கோலிவுட் சினிமா இண்டஸ்ட்ரிக்குள் செல்வது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை.

அது அவருக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. அதற்காக உழைத்த அவருக்கு முதலாவது படவாய்ப்பு  2010ல் கிடைத்தது. அந்தப் படத்தினுடைய பேர் கை போ சே. அந்த பாடம் சேத்தன் பகத் என்று ஒருவருடைய நாவல் அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் . அந்த படம் மிகப்பெரிய ஹிட் ஆனதால் அவருடைய பெயர் இன்னும் பிரபலமாக பேசப்பட்டது. அப்படி இருந்தாலும் கூட அவருடைய இரண்டாவது படம் வெளிவராமலேயே இருந்தது. அதற்கான காரணம் என்னவென்றால் இரண்டாவது படத்துக்கு மிகப்பெரிய நடிகைகளைதேடி வந்தனர்.

ஆனால்  எந்த நடிகையும் இவர் ஒரு புதுமுக நடிகர் என்ற காரணத்தினால்அவருடன் நடிப்பதற்கு தயாராக இல்லை. அப்படி இருந்த போதிலும் பல்லவி சோப்ரா அதாவது பிரியங்கா சோப்ரா உடைய கசின் சிஸ்டர் இவருடன் நடிக்க சம்மதிக்கிறார். அந்த படம் பெரிய ஹிட்டானது. இதனால் சுஷாந்த் டான்சர் என்பதையும் தாண்டி நல்ல நடிகர் என்பதையும் நிரூபித்தார். இப்படியே தொடர்ந்து இன்னும் பல படங்களில் நடித்துவிட்டு வந்தார். அவருடைய பேர் இன்னும் பிரபலமாகி கொண்டிருக்கிறது. அவருடைய வாழ்க்கையைப் புரட்டிப்போட்ட படம் என்று சொன்னால் நாம் எல்லாருக்கும் தெரிஞ்ச டோனி உடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த டோனி அன்டோல்ட் ஸ்டோரி தான்.

அந்தப் படம் மிகவும் பிரபலமடைந்து சுஷாந்த் முகம் இந்தியாவில் வாழக்கூடிய அனைத்து தோனி ரசிகர்கள் மனதிலும் பதிவாகிறது. அதற்கு காரணம் அவர் கொடுத்திருந்த உழைப்புதான். டோனியோட உண்மையான மனரிஸம், பிகேவியர் எல்லாவற்றையும் நல்ல முறையில் செய்திருந்தார் . அதனால தான் அவருடைய பெயர் இன்னும் பிரபலமாக பேசப்பட்டது. இப்படி படிப்படியாக எந்த ஒரு கோலிவுட் சினிமா பின்னணியும் இல்லாமல் மிகப்பெரிய நடிகராக தன்னை தடம் பதித்துக் கொண்ட இந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் என்பவர் தன்னுடைய 34வது வயதில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Categories

Tech |