மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் 3 மணிக்கு நடைபெறுமென்று பா.ஜ.க செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் திடீர் மறைவுச் செய்தியை அறிந்த பா.ஜ.க தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் குவிந்தனர். அங்கு வைக்கப்பட்டிருந்த சுஷ்மா சுவராஜின்வின் உடலுக்கு பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா , மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ரவிசங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான் மற்றும் உள்ளிட்ட முக்கிய பாஜக தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து சுஷ்மா சுவராஜின் உடல் அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அவரது வீட்டில் குவிந்துள்ள அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பாஜகவின் தொண்டர்கள் சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதன்பிறகு சுஷ்மா சுவராஜின் உடலுக்கு கட்சியினர் மரியாதை செலுத்துவதற்காக இன்று நண்பகல் 12 மணி அளவில் பாஜக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும், பிற்பகல் 3 மணிக்கு அவருக்கு இறுதிச் சடங்கு நடைபெறும் என்றும் பா.ஜ.க_வின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.