Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் ஏழாம் நாள் திருவிழா…!!

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் மார்கழி மாத தேர் திருவிழாவை முன்னிட்டு ஏழாம் திருவிழாவான இன்று சாமி கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்திபெற்ற சுசீந்தரம் தாணுமாலைய சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பல முக்கிய விழாக்களில் ஒன்றான மார்கழி மாத தேர் திருவிழாவானது பத்து நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம்.அந்தவகையில் இந்தாண்டிற்கான மார்கழி மாத தேர் திருவிழாவானது ஜனவரி ஒன்றாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழாம் நாளான நேற்று தாணுமாலய சுவாமி, கருடவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

முன்னதாக சிங்காரி மேளம் ,முத்துக்குடை பவனி, அகல்விளக்கு பவனி , சிவன், பார்வதி, முருகன், கணபதி, ராவணன், கைலாய சிவன், பார்வதி,விஷ்ணு, பிரம்மா, வேடமணிந்த குழந்தைகலும் பக்தர்களும் ஆடிப்பாடி வந்தனர்.இந்த திருவிழாவில், தமிழ்நாடு மட்டுமல்லாது, கேரளா உள்ளிட பல மாநிலத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சாமியின் அருளைப்பெற்று சென்றனர்.

இறுதியில் வானவேடிக்கையும் நடைபெற்றது. பத்து நாட்கள் நடிபெறும் இந்த விழாவில், ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள், மக்கள் மார் சந்திப்பு, சுவாமி வீதி உலா வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்சிகள் நடைபெறவுள்ளன. வருகிற ஒன்பதாம் தேதி தேர் திருவிழா நடைபெறவுள்ளதால் குமரி மாவட்டத்திற்கு அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |