முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் வாழ்க்கை வரலாறு மற்றும் அரசியலில் அவர் கடந்து வந்த பாதையை தற்போது பார்க்கலாம். சுஷ்மா ஸ்வராஜ் 1952 பிப்ரவரி 14 ஆம் தேதி பிறந்தார். ஹரியானா மாநிலம் அம்பாலாவில் பிறந்த சுஷ்மா சுவராஜின் குடும்பம் பாகிஸ்தான் லாகூரில் இருந்து பிரிவினையின் போது இந்தியாவில் குடிபெயர்ந்தனர். அவருடைய தந்தை தனது சிறு வயதிலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுப்பினராக இருந்தவர். சிறு வயது முதலே ஆர்.எஸ்.எஸ் கருத்துகளை கேட்டு வளர்ந்த சுஷ்மாவுக்கு சமஸ்கிருத மொழி மீது மிகப்பெரிய பற்று இருந்தது. அதில் பட்டம் பெற்ற அவர் அரசியல் மீதான ஆர்வத்தின் காரணமாக பொலிட்டிகல் சயின்ஸ் பிரிவில் பட்டம் பெற்றார். மேலும் சட்டப் படிப்பும் அவர் பயின்றார்.
1970ஆம் ஆண்டு பரிசுத்த அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார் சுஷ்மா. உச்சநீதிமன்றத்தில் அது 1973 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியாற்றினார். அரசியலில் மெல்லமெல்ல தனக்கான பாதையை அவர் உருவாக்கினார். அவருடைய கணவர் ஸ்வராஜ் கவுஷலும் சட்டத்துறையினர் நிபுணத்துவம் பெற்றவர். அதனால் அரசியல் களத்திலும் சட்டத் துறையிலும் அவரால் ஒருசேர பயணிக்க முடிந்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இந்தியாவில் அவசர நிலையை பிரகடனம் செய்தபோது அவரின் அத்துமீறல்களை கண்டு கொதித்தெழுந்த சுஷ்மா தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
பின்னர் 1977 ஆம் ஆண்டு அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற சுஷ்மா 1982 வரை அம்மாநில சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவி வகித்தார். சிறந்த பேச்சாற்றலும் தீவிர அரசியல் சிந்தனையும் கொண்டதால் மக்களோடு மக்களாக இணைந்து பழகினார். சுஷ்மாவுக்கு அமைச்சர் பதவி தேடிவந்தது. தனது 25-வது வயதில் அரியானா மாநிலத்தின் கல்வி துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் சுஷ்மா. தன்னுடைய 27-வது வயதில் அரியானா மாநிலம் பா.ஜ.க தலைவராக தேர்வு செய்யப்பட்ட சுஷ்மா 1998ஆம் ஆண்டு டெல்லியின் முதல்வராக பதவி ஏற்றார். டெல்லியின் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையும் சுஷ்மாவிற்கு கிடைத்தது.
ஆனால் அதே ஆண்டு டிசம்பரில் மத்திய அமைச்சர் பதவிக்காக முதல்வர் பதவியை துறந்தார். நாடாளுமன்ற உறுப்பினராக 7 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். 3 முறை சட்டசபை உறுப்பினராகவும் பதவி வகித்தார். தகவல் மற்றும் தொலைத்தொடர்பு துறை, குடும்ப நலத் துறை, சுகாதாரத்துறை உள்ளிட்டவற்றுக்கு அமைச்சராக பதவி வகித்துள்ளார். சுஷ்மா சுவராஜ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோதுதான் போபால், ஒடிசா, ராஜஸ்தான், பீகார், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டமைத்தார். 2009ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தோல்வியை தழுவியது.
அப்போது பாஜக மக்களவைகான எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா இருந்தார். உள்துறை அமைச்சராக சுஷ்மா ஸ்வராஜ் இருந்தபோது பாதிக்கப்பட்ட மக்களுக்காக இவர் காட்டிய அன்பு எதிர்க்கட்சியினரை அசத்தியது. சோனியாகாந்தி சுஷ்மாவின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். வெளிநாடுகளில் சிக்கலில் சிக்கிய இந்தியர்களுக்கு தேவையான உதவியை சுஷ்மா சுவராஜ் செய்துவந்தார். சமூக வலைதளங்களில் இந்தியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளித்து வந்தார். இதனால் பலரும் அவரை பாராட்டி வந்தனர்.
கடந்த பா.ஜ.க ஆட்சியில் வெளியுறவு துறையில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய சுஷ்மா உடல்நிலையை காரணம் காட்டி இந்த முறை அமைச்சரவை பதவியை வேண்டாம் என்று கூறிவிட்டார். இதனையடுத்து ஆகஸ்ட் 6 ஆம் தேதி இரவு 9.3௦ மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 67 வயதான சும்மா இந்தியாவில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். அவருடைய மரணத்திற்கு பல முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.