சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருந்த சிறுமியிடம் என்னுடன் வந்து காரில் ஏறு என்று சொன்ன மர்ம நபரை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்
கனடாவில் Vancouver என்ற பகுதியில் மாலை 3 1/2 மணி அளவில் 12 வயது சிறுமி ஒருவர் சாலையில் மிதி வண்டி ஓட்டிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியின் அருகில் சென்று கவரும் வகையில் பேச்சுக் கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியிடம் என்னுடன் வா காரில் ஏறு என கூறியுள்ளார். ஆனால் சிறுமி உடனடியாக அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று தனது தாயாரிடம் நடந்ததைக் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து காவல்துறையினரிடம் தாயார் புகார் அளிக்க சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளி இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டோம் என தெரிவித்துள்ளனர். ஆனால் குற்றவாளி கைது செய்யப்பட்டாரா இல்லையா என்ற விபரம் இதுவரை போலிசார் தெரிவிக்கவில்லை.