கூலித்தொழிலாளி திடீரென மர்மமான உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தர்மன் தோப்பு கிராமத்தில் அண்ணாமலை என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக கால் தவறி கீழே விழுந்து விட்டார். இதனை அடுத்து பலத்த காயமடைந்த அண்ணாமலையை மீட்டு அவரது உறவினர்கள் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கூலித்தொழிலாளியின் மர்மமான மரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.