வாலிபர் உடைய மர்ம மரணத்தால் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டத்திலுள்ள தினமணி நகரில் வசித்து வருபவர் வினோத்குமார். இவருடைய நண்பரான கேசவன் அதே பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு மங்களம்கொம்புவில் சொந்த வீடு ஒன்று உள்ளது. இந்நிலையில் வினோத்குமார், கேசவன் மற்றும் அவருடைய ஐந்து நண்பர்களும் கொடைக்கானல் பகுதிக்கு சுற்றுலா சென்றுவிட்டு பின்னர் மங்கலம்கொம்புவில் உள்ள கேசவன் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளனர்.
அதன்பின் மறுநாள் காலை வினோத்குமாரை தவிர அனைவரும் படுக்கையில் இருந்து எழுந்துள்ளனர். ஆனால் வினோத்குமார் மட்டும் வெகு நேரமாகியும் ஏலாததால் அவருடைய நண்பர்கள் அவரை எழுப்பியுள்ளனர். ஆனால் அவர் இறந்த நிலையில் கிடந்துள்ளார். உடனே அவர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர்.இந்த புகாரின் பேரில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வினோத்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வினோத்குமாரின் நண்பர்களிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.