Categories
தேசிய செய்திகள்

“குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விபத்து”…. 4 வயது சிறுவன் உயிருடன் மீட்பு….. பெற்றோர் பலியானதால் சோகம்….!!!!

குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் அருகே உள்ள மோர்பி தொங்குபாலம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 177 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் பிறகு விபத்து நடைபெறும் போது பாலத்தில் 500 பேர் வரை நின்றதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பழமை வாய்ந்த பாலம் என்பதால் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில், கடந்த 26-ம் தேதி தான் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்நிலையில்  விபத்தில் ஹர்ஷ் மற்றும் அவரின் மனைவி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இந்த தம்பதிகளின் 4 வயது மகன் மிரால்பென் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த சிறுவனின் மாமாவான ஹர்திக் என்பவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். ஆனால் இவரின் மனைவி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்து விட்டார். மேலும் மீட்க்கப்பட்ட சிறுவன் மற்றும் ஹர்திக் ஆகிய 2 பேரும் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Categories

Tech |