Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சந்தேகம்” 11 மாத குழந்தை…. துடி துடிக்க சாவு….. தாய்-தந்தை கைது….. விருதுநகர் அருகே கொடூரம்…!!

விருதுநகர் அருகே கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களது 11 மாத குழந்தையை துடிதுடிக்க கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பகுதியில் உள்ள அரசு பணியாளர் குடியிருப்பில் வசித்து வருபவர் அமல்ராஜ். இவரது மனைவி சம்சீதா  இவர்களது 11மாத குழந்தை சில நாட்களுக்கு முன்பு நீரில் மூழ்கி இருந்ததாக காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் அதிகாரிகள் கணவன் மனைவி இருவரிடமும் விசாரணை மேற்கொள்கையில், பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதில்,

ஓர் ஆண்டுக்கு முன்பு காரியாபட்டி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சம்சீதா 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் அமல்ராஜ் என்பவருக்கும் காதல் மலர்ந்து நெருக்கமாக பழக சம்சீதா கர்ப்பமாகி விட்டார். இது  பள்ளிக்கு தெரியவர 7 மாத கர்ப்பிணியாக இருந்த சமயத்தில் அவரை பள்ளியை விட்டு மாற்று சான்றிதழ் கொடுத்து அனுப்பி விட்டனர். இதையடுத்து இருவீட்டாரும் சேர்ந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் அமல்ராஜ் வீட்டிற்கு இது சுத்தமாக பிடிக்கவில்லை. ஆண் குழந்தை பிறக்கவே இது என்னுடைய குழந்தை இல்லை என அமல்ராஜ் திடீரென தகராறு செய்தார். இது குறித்து பல்வேறு இடங்களில் சம்சீதா தொடர்ந்து புகார் அளித்து அமல்ராஜ் உடன் சேர்ந்து வாழுமாறு வலியுறுத்த கடந்த தை பொங்கல் அன்று அமல்ராஜ் வீட்டிற்கு முதல் முறையாக வாழ சென்றார் சம்சீதா.  அங்கு குழந்தையை அமல்ராஜும் அவரது வீட்டாரும் தொட்டு கூட பார்க்கவில்லை.

இதனால் வேதனை அடைந்த சம்சீதாவிற்கு குழந்தை மீது வெறுப்பு ஏற்பட்டது. கடந்த வாரத்தில் குழந்தையால் தான் நமக்கு பெரிய பிரச்சனை அதனைக் கொன்று விடு என்று அமல்ராஜ் கூற அவர் கண்முன்னே தண்ணீர் நிரம்பியிருந்த வாளியில் குழந்தையை தலைகீழாக கவிழ்த்து சாகடித்து,

அதன்பின் அதைக் கொண்டு நீரில் மூழ்கி இறந்து விட்டதாக அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று நாடகம் ஆடியுள்ளார். இந்த திடுக்கிடும் தகவலை கேட்டு அதிர்ந்து போன காவல்துறையினர் கணவன் மனைவி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவர்களது  பெற்றோர் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |