Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சுட்டெரிக்கும் வெயில்… குளிர்பான கடைகளில் கூட்டம்… சாலையோர வியாபாரிகளுக்கு விற்பனை அமோகம்…!!

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மக்கள் வெள்ளரிப் பிஞ்சு, இளநீர், நுங்கு போன்றவற்றை  அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் யாரும் வெளியே போகவும், வீட்டிற்குள் இருக்கவும், முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். ஆனால் சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சில நாட்கள் மட்டுமே குளிர்ச்சியைத் தருகிறது. அதன் பிறகு மறுபடியும் வெயிலின் தாக்கம் அதிகமாக சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் அதிகம் வெளியில் போவதை தவிர்த்து வருகின்றனர்.

இந்நிலையில் பொதுமக்கள் இதனை சமாளிக்கும் வகையில் குளிர்பானங்கள், இளநீர்,கரும்புச்சாறு மற்றும் பழச்சாறு போன்ற குளிர்பானங்களை பருகி தங்களது தாகத்தையும், உடலின் வெப்பத்தையும், தணித்துக் கொள்கின்றனர். அதுமட்டுமில்லாமல் வெள்ளரிப்பிஞ்சு, நுங்கு போன்ற பொருட்களை மக்கள் வாங்குவதற்கு சாலையோரம்  உள்ள கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றது. இதனால் சாலையோர வியாபாரிகள் 20 ரூபாய்க்கு பத்து நுங்குகளையும், வெள்ளரிப்பிஞ்சு 10 முதல் 20 ரூபாய்க்கும், கரும்புச்சாறு 20 ரூபாய்க்கும் ,இளநீர் 30 ரூபாய்க்கும் விற்பனை செய்து வருகின்றனர். இவ்வாறு பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தணிப்பதற்காக இந்த பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Categories

Tech |