Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

காலை 11 மணிக்கு மேல்…. சுட்டெரிக்கும் வெயில்…. கஷ்டப்படும் பொதுமக்கள்….!!

கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் சுட்டெரித்து வருவதால் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையாக வெயில் சுட்டெரித்து வருகின்றது. இதற்கிடையே லேசான மழை பெய்தாலும் வெயிலின் தாக்கமே அதிகளவில் இருந்து வருகிறது. எனவே கொரோனா ஊரடங்கால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வரும் நிலையில் சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கூத்தாநல்லூர் பகுதியில் கடுமையான வெயில் நிலவியதால் காலை 11 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்து மாலை வரை கடுமையான வெயில் அடித்ததால் நகர் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருந்தது.

Categories

Tech |