வெயிலின் பாதிப்பு அதிகரித்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கோடைத்தில் மற்ற மாவட்டங்களை காட்டிலும் வெயிலின் பாதிப்பு சற்று அதிகமாகவே காணப்படும். இதற்காகவே வேலூர் மாவட்டத்தை வெயிலூர் என்று அழைப்பர். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் முடிந்த பின்னரும் வெயிலின் பாதிப்பு அதிகமாக காணப்படுவதால் மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதனையடுத்து மாவட்டத்தில் காலை 9 மணி முதல் தொடங்கிய வெயில் பாதிப்பு மதியம் அதிகரித்து 103 டிகிரியை தாண்டி 103.3 டிகிரி பதிவானது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது அனல் காற்று வீசியதால் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருந்தனர். ஆனால் மாலை வேளையில் வேலூர், கொணவட்டம், சேண்பாக்கம் போன்ற சில பகுதிகளில் சிறிது நேரம் லேசான மழை பெய்துள்ளது.