Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

சூடேற்றி சாப்பிட விரும்புபவரா…? இதை கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க…!!

தற்போதைய பரபரப்பான வாழ்க்கை முறையில் உணவுகளை சமைத்து சாப்பிட நேரமில்லாததால் எளிதில் சூடேற்றி சாப்பிடக் கூடிய உணவுகளையே அனைவரும் விரும்புகின்றோம். இதனால் பல்வேறு நோய்கள் நம்மை வேகமாக தாக்குகின்றன.

அடிக்கடி சூடேற்றி சாப்பிடக்கூடாத உணவு வகைகளின் தொகுப்பு:

முட்டை

முட்டையில் அதிக அளவில் புரோட்டீன் உள்ளது. இதை அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. முட்டையைப் பலமுறை சூடேற்றி உட்கொண்டால் செரிமான மண்டலம் கடுமையாக பாதிப்படையும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை பொரித்து சாப்பிடுவதை தவிர்த்து, வேக வைத்து சாப்பிடுவதால் அதிலுள்ள முழுமையான சத்துக்களையும் பெற முடியும். மேலும் ஒருமுறை உருளைக்கிழங்கை சமைத்த பின்னர் மீண்டும் சூடேற்றினால் நச்சுத்தன்மை கொண்டதாக மாறி விடும்.

கோழி இறைச்சி

கோழி இறைச்சியில் அதிகளவு புரோட்டின் உள்ளது. இதனை 2 அல்லது 3 முறைக்கு மேல் சூடேற்றி சாப்பிடுவதால் செரிமான பிரச்சினைகள் உண்டாகும். எனவே இறைச்சியை தேவையான அளவு மட்டும் உபயோகித்து மீதமுள்ளதை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

காளான்

காளானில் காம்ப்ளக்ஸ் புரோட்டீன்கள் உள்ளது. இதனை ஒருமுறை சமைத்தபின் மீண்டும் சூடேற்றி சாப்பிடுவதால் தீவிரமான பக்க விளைவுகள் உண்டாகும்.

பசலைக்கீரை

பசலைக்கீரையில் இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட்டுகள் அதிக அளவில் உள்ளன. இதை பலமுறை சூடேற்றினால் அதிலுள்ள நைட்ரேட்டுகள் நைட்ரைடுகளாக மாறுவதோடு புற்றுநோயை ஏற்படுத்தும் கார்சினோஜென்களாக மாறிவிடும்.

Categories

Tech |