Categories
தேசிய செய்திகள்

சுதந்திர தினம் : முக்கிய பகுதிகள் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு …!!

நாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டின் 74வது சுதந்திர தின விழாவையொட்டி நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்க இருக்கிறார். சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கும் பொருட்டு, நாடு முழுவதும் விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களிலும், முக்கிய சுற்றுலா தலங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைநகரில் டெல்லியின் நொய்டா மைதானத்தில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

Categories

Tech |