சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் 2 வாலிபர்கள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா நாட்டில் ஓஹியோ மாகாணத்தில் சின்சின்னாட்டி பகுதியில் இருக்கும் ஒரு பூங்காவில் வாலிபர்கள் 400 ஒன்று சேர்ந்து சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தவர்கள் மீது தீடிரென மர்ம நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 மற்றும் 19 வயதுடைய 2 வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.