Categories
உலக செய்திகள்

102வது சுதந்திர தினவிழா…. சாலையில் ஊர்வலம் சென்ற பொதுமக்கள்…. துப்பாக்கிச்சூடு நடத்திய தலீபான்கள்….!!

சுதந்திர தினவிழாவிற்காக சாலையில் ஊர்வலம் சென்றவர்களை தலீபான்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் நாடானது தலீபான்கள் கைவசம் சிக்கியுள்ளது. இதனால் ஆப்கான் நாட்டில் இருந்து பல்வேறு மக்கள் வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆப்கானிஸ்தானின் 102வது சுதந்திர தினமானது கொண்டாடப்பட்டது. அதில்  Asadabad நகரில் உள்ள மக்கள் ஆப்கான் தேசியக் கொடியுடன் சாலையில் நேற்று ஊர்வலமாக சென்றுள்ளனர். இந்த ஊர்வலத்தில் தேசிய கொடியை அசைத்த பொதுமக்களை குறிவைத்து தலீபான்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதனால் மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓடியுள்ளனர்.

இந்த கூட்ட நெரிசலில் பலர் சிக்கி உயிரிழந்ததாக சம்பவத்தை நேரில் கண்ட முகமது சலீம் என்பவர் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா இல்லை கூட்டநெரிசலில் மக்கள் இறந்துள்ளனரா  என்பது குறித்த விவரங்கள் தெளிவாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.  மேலும் இச்சம்பவம் தொடர்பாக எந்த ஒரு விளக்கமும் தலீபான்களிடமிருந்து அதிகாரபூர்வமாக வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |