அழகு நிலைய பெண் உரிமையாளர் கொலை குறித்து வங்காளதேசத்தில் உள்ள அவருடைய கணவரை சேலத்துக்கு அழைத்து வந்து காவல்துறையினர் விசாரணை நடத்த இருக்கின்றனர்.
வங்காளதேசத்தில் தேஜ்மண்டல் என்பவர் வசித்து வந்தார். இதனையடுத்து சேலம் வின்சென்ட் பகுதியில் தேஜ்மண்டல் வாடகைக்கு வீடு எடுத்து அதில் அழகு நிலையம் நடத்தி வந்தார். அப்போது தேஜ்மண்டலுடன் அவரது நண்பர்கள் லப்லு, ரிஷி ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த அக்டோபர் மாதம் 15-ஆம் தேதியன்று தேஜ்மண்டல் படுகொலை செய்யப்பட்டார். மேலும் அவரது சடலம் சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். இது தொடர்பாக தனிப்படை காவல்துறையினர் கூறியதாவது “தேஜ்மண்டலுடன் இருந்த லப்லு, ரிஷி ஆகியோர் கொலை நடந்த நாளில் இருந்து தலைமறைவாகி இருக்கின்றனர். அவர்களை பல்வேறு இடங்களில் நாங்கள் தேடி வருகின்றோம்.
ஆகவே இந்த கொலை குறித்து வங்காள தேசத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அங்குள்ள அதிகாரிகள் மூலம் நடத்தப்பட்ட விசாரணையில் தேஜ்மண்டலுக்கு திருமணமாகி முகமது ராக்கி என்ற கணவரும், 5 வயதில் ஒரு குழந்தையும் இருப்பது தெரியவந்தது. அவர்கள் தேஜ்மண்டலின் சொந்த ஊரான வங்காளதேசம் குமிளா மாகாணத்துக்குட்பட்ட போத்தாளி என்ற பகுதியில் இருக்கின்றனர். இந்நிலையில் முகமது ராக்கியை நாங்கள் செல்போனில் தொடர்பு கொண்டு விசாரணை மேற்கொள்ள இருக்கின்றோம். மேலும் முகமது ராக்கியை சேலத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். அதுமட்டுமின்றி இந்த கொலை குறித்து தேஜ்மண்டலுடன் இதுவரை தொடர்பில் இருந்த 100-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது” என்று அவர்கள் கூறினார்கள்