நண்பர்களுடன் மலைகளை சுற்றி பார்க்க சென்ற வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்திலுள்ள கல்தான்பேட்டை பகுதியில் முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ மொபைல் மெக்கானிக். இந்நிலையில் முகமது இஸ்மாயில் தனது நண்பர்கள் 6 பேருடன் கல்வராயன் மலையை சுற்றி பார்க்க சென்றுள்ளார். அப்போது கோட்டியால் மலைப் பகுதியில் இருக்கும் நீர் வீழ்ச்சியில் அவர்கள் குளித்துள்ளனர். அந்நேரம் பாறையில் கால் வலித்தால் முகம்மது இஸ்மாயில் தவறி கீழே இருக்கும் தண்ணீர் தேங்கிய பகுதியில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் அவரைக் காணாததால் அவரின் நண்பர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீர் வீழ்ச்சியில் முகமது இஸ்மாயில் உடலைத் தேடி கண்டு பிடித்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.