Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சுற்றித் திரிந்த யானை…. ஸ்தம்பித்த போக்குவரத்து…. ஈரோட்டில் பரபரப்பு….!!

தேசிய நெடுஞ்சாலையில் யானை சுற்றித் திரிந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி, கேர்மாளம் வனச்சரகத்தில் பெரும்பாலான யானைகள் வசித்து வருகின்றது. இங்கு திண்டுக்கல்லில் இருந்து பெங்களூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை இருக்கிறது. இந்த நெடுஞ்சாலையை ஆசனூர் வனப் பகுதியிலுள்ள யானைகள் கடப்பது வழக்கமாக இருக்கிறது. அதன்படி ஒற்றை யானையானது திம்பம் போகும் சாலைக்கு வந்துள்ளது.

இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வண்டிகளை தூரத்தில் நிறுத்தினர். இதனையடுத்து யானை சாலையில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்தது. அப்போது வாகன ஓட்டிகள் சில பேர் தங்களது செல்போனில் யானையை போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். அதன்பின் சிறிது நேரத்திற்கு பிறகு யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதனைதொடர்ந்து வாகனங்கள் அங்கிருந்து ஒவ்வொன்றாக சென்றது. இவ்வாறு யானை நடுரோட்டில் அங்கும் இங்குமாக சுற்றி திரிந்ததால் சுமார் 1/2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Categories

Tech |