Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சாலைகளில் சுற்றி திரியும் மாடு…. வாகன ஓட்டிகளின் கோரிக்கை…. கமிஷனரின் அதிரடி உத்தரவு….!!

சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளுக்கு 10 ரூபாய் அபராதம் விதிக்கும்படி கமிஷனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளால் போக்குவரத்து பாதிக்கப்படுகின்றது. எனவே சில சமயங்களில் வாகனங்கள் விபத்து ஏற்படுவதனால் அவற்றை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து சாலைகளில் சுற்றித் திரியும் ஆடு, மாடுகளை பிடித்து அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும்படி கமிஷனர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில், மாநகராட்சி ஊழியர்கள் வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்துக்கு  இடையூறாக சுற்றித்திரிந்த 3 மாடுகளை பிடித்துள்ளனர். அதன்பின் அதை 2-வது மண்டல அலுவலக வளாகத்தில் கட்டி வைக்கப்பட்டு மாடுகளை விடுவிக்க 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |