2022-ஆம் வருடம் வரை சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி கிடையாது என ஆஸ்திரேலியா பிரதமர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு தொடங்கிய கொரோனா இன்று வரை குறையாமல் மக்களை துன்புறுத்தி வருகின்றது. இதனால் கொரோனாவின் தாக்கத்தைக் குறைப்பதற்கு உலக நாடுகள் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனையடுத்து கொரோனாவுக்கு எதிராக அனைத்து மக்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் 2022 -ஆம் ஆண்டு வரை சர்வதேச சுற்றுலா பயணிகள் அந்நாட்டுக்குள் நுழைய அனுமதி கிடையாது என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். ஆனால் புலம்பெயர்ந்தோர் மற்றும் உயர் படிப்பு மாணவர்களுக்கு மட்டும் இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் முதல் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்ட நிரந்தரக் குடிமக்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்பதையும் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.