தாய்லாந்து நாட்டில் ரயில் மீது பேருந்து மோதிய விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர், மேலும் பலர் காயமடைந்தனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சசாங் சவ்ங் பகுதியில் புத்த விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சிலர் பேருந்தில் பயணம் மேற்கொண்டிருந்தனர். அந்த பேருந்து கிராங் கிளின் கிளான் ரயில் நிலையம் அருகேயுள்ள லெவல் கிராசிங்கில் ஒரு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த 20 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்துவந்த மீட்புப் பணியாளர்கள் விபத்தில் காயமடைந்த 29 பேரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.