கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை கலைபண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு சுற்றுலா, கலைபண்பாடு மற்றும் இந்துசமய அறநிலையதுறை முதன்மைச் செயலாளர் திரு.சந்திரமோகன் நேற்று சென்றுள்ளார். அதன்பின் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமையில் மாவட்டத்திலுள்ள சுற்றுலா தலங்களான திற்பரப்பு அருவிக்கு சென்று அருவியின் மேல் பகுதியில் இருக்கும் தடுப்பணை, சிறுவர் பூங்கா, படகுத்தளம் மற்றும் நீர்வீழ்ச்சி பகுதி போன்றவற்றை திரு.சந்திரமோகன் ஆய்வு செய்துள்ளார்.
இதனையடுத்து மாத்தூர் தொட்டிபாலத்துக்கு சென்று அங்கு பாலத்தில் தண்ணீர் செல்லும் பகுதி, பூங்கா, காட்சிக் கோபுரம் போன்றவற்றை பார்வையிட்டு பாலத்தின் வடிவமைப்பு பற்றி அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்துள்ளார். இதனைத்தொடர்ந்து கன்னியாகுமரிக்கு சென்று அங்கு கடற்கரையில் நிறைவேற்றப்பட்டுள்ள சுற்றுலா மேம்பாட்டு பணிகளை திரு.சந்திரமோகன் ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின்போது பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் அவருடன் இருந்தனர்.