கனட நாட்டிற்குள் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து தடுப்பூசியின் முழுமையான டோஸ்ஸை செலுத்தி கொண்ட சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி உண்டு என்று அந்நாட்டின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
சீனாவிலிருந்து தோன்றிய கொரோனாவை விரட்டியடிக்க அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. அதுபோல் அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது.
அந்த வகையில் கனடா நாட்டின் பிரதமர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதாவது கொரோனாவின் முழு டோஸ் தடுப்பூசியையும் எடுத்துக்கொண்ட சுற்றுலா பயணிகள் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து தங்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அதோடு மட்டுமின்றி ஆகஸ்ட் மாதத்திலிருந்தே கொரோனாவிற்கான முழு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுக்கொண்ட அமெரிக்க வாசிகள் தங்கள் நாட்டிற்குள் நுழையலாம் என்றும் அறிவித்துள்ளார்.