Categories
உலக செய்திகள்

சுற்றுலா சென்ற பயணிகள்…. 19 பேருக்கு நடந்த சோகம்…. மெக்சிகோவில் பயங்கர விபத்து….!!

மெக்சிகோவில் பயணிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த பேருந்து குடியிருப்பின் மீது மோதியதில் 19 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மெக்சிகோ சல்மா நகரிலுள்ள தேவாலயத்திற்கு சுற்றுலா பயணிகளுடன் சென்று  கொண்டிருந்த பஸ், பிரேக்கில் பழுது ஏற்பட்டதால் குடியிருப்பின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.

மேலும் 32 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதில் 6 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் இறந்தவர் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Categories

Tech |