Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

குறுக்கே வந்த வாத்து கூட்டம்…. சடென் பிரேக் போட்ட ஓட்டுனர்…. கிருஷ்ணகிரியில் பரபரப்பு….!!

சுற்றுலாவிற்கு சென்று விட்டு வரும் வழியில் வேன் கவிழ்ந்து காயமடைந்த 1௦ பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல் பெரும்பாக்கம் பகுதியில் வசிக்கும் பெண்கள் உள்பட 16 நபர்கள் வேனில் தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். இந்நிலையில் ஒகேனக்கல்லில் இருக்கும் பல இடங்களை சுற்றிப் பார்த்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருக்கும் போது தாதம்பட்டி மாவத்தூர் பிரிவு சாலையில் வாத்து கூட்டத்தின் மீது மோதாமல் இருப்பதற்காக ஓட்டுனர் திடீரென பிரேக் போட்டுள்ளார்.

இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் வேனில் சென்ற பத்து நபர்கள் பலத்தக் காயம் அடைந்துள்ளனர். பின்னர் இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |