Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சுற்றுலாத்தலமாக மாறுமா…? அழகாக காட்சியளிக்கும் தேக்கு மரம்…. பொதுமக்களின் எதிர்பார்ப்பு….!!

கோரையாறு தலைப்பு அணை சுற்றுலாத்தலமாக மாறுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலத்திற்கு அருகில் மூணாறு தலைப்பு அணை (கோரையாறு தலைப்பு) இருக்கின்றது. இந்நிலையில் வருடதோறும் மேட்டூர் அணை திறக்கப்பட்டபின் அங்கு இருந்து நீர் கல்லணைக்கு வந்து பாசனத்துக்காக திறந்துவிடப்பட்டு பெரிய வெண்ணாறு வழியாக நீடாமங்கலத்திற்கு அருகில் உள்ள மூணாறு தலைப்பை வந்து சேரும். இங்குள்ள அணையில் இருந்து வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு ஆகிய 3 ஆறுகளில் பிரித்து அனுப்பப்படுவதன் மூலம் திருவாரூர், நாகை மாவட்ட பாசனத்திற்கு பயனுள்ளதாக இருக்கின்றது.

இவ்வாறு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இந்த மூணாறு தலைப்பு அணை கட்டப்பட்டது. இங்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பாக கட்டப்பட்டு தமிழக அரசின் பொதுப்பணித்துறை சார்பாக பயணிகள் ஆய்வு மாளிகை கட்டிடம் ஒரு காலத்தில் தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், அரசு உயர் அதிகாரிகள் தங்குமிடமாக இருந்துள்ளது. இந்த கட்டிடம் சேதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியும் புதுப்பித்து கட்டவில்லை. அதன்பின் நீடாமங்கலத்திலிருந்து மூணாறு தலைப்பு அணைக்கு செல்லும் சாலையின் இருபக்கமும் அடர்ந்த காடுகள் போல் பெரும்பாலான மரங்கள் இருக்கின்றன.

மேலும் அணைப்பகுதியில் தேக்கு மரங்கள்  அழகாக காட்சியளித்து மக்கள் நடமாட்டமும் அதிகமாக இருக்கின்றது. ஆகவே மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்க முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பினை செயல்படுத்த போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மூணாறு தலைப்பு அணை பகுதியை சுற்றுலா மையமாக்கினால் ஆலங்குடி குருபகவான் கோவில், வேளாங்கண்ணி மாதா பேராலயம், நாகூர் ஆண்டவர் தர்காவுக்கு வருபவர்கள் மூணாறு தலைப்பு அணைக்கு வந்து செல்கின்றனர். இதன் மூலம் இந்தப் பகுதியில் வாழ்வாதாரம் செழிப்பதனால் மூணாறு தலைப்பு அணையை சுற்றுலா மையமாக்க தமிழக முதலமைச்சர் முக. ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Categories

Tech |