Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுற்றுலா வந்த 16 பேர்…. வழியில் நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை….!!

சுற்றுலா வேன் கவிழ்ந்து 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலமான பெங்களூரைச் சேர்ந்த ஹரிஷ்குமாரின் வேனில் 16 நபர்கள் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். இந்த வேனை ஹரிஷ்குமார் ஓட்டி வந்தார். இதனையடுத்து அனைவரும் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு வேனில் நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் வழியாக மீண்டும் பெங்களூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கூடலூர் சில்வர் கிளவுட் வனத்துறை சோதனைச்சாவடியை கடந்த போது திடீரென்று டிரைவர் தன் கட்டுபாட்டை இழந்ததால் வேன் சாலையோரம் உள்ள தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால் வேனுக்குள் இருந்த சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு பெங்களூரை சேர்ந்த ஹரிஷ்குமார், லட்சுமி, வனசாட்ஷி உட்பட 16 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அனைவரும் மேல் சிகிச்சைக்காக பெங்களூர் சென்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |