சுற்றுச்சுவரில் தனியார் பேருந்து மோதிய விபத்தில் 50 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இருந்து சிதம்பரம் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கடலூர் மாவட்டம் சிதம்பரம் சாத்தங்குடி கிராமத்தை சேர்ந்த ரகுராமன் என்பவர் ஓட்டி வந்தார். இந்நிலையில் சுவாமிமலை அருகேயுள்ள சுந்தரப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் எதிர்ப்புறம் உள்ள சமுதாய கூடத்தின் சுற்றுச்சுவரில் திடீரென அந்த பேருந்து மோதி விபத்துக்குள்ளானது.
அப்போது பேருந்தில் பயணம் செய்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவ்வாறு சுற்றுச்சுவரில் மோதியதில் பேருந்தின் முன்புற கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று பேருந்தில் பயணம் செய்த பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.