வெளியுறவுத்துறை மந்திரியின் அரசு சார்ந்த 2 நாள் பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கிடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் விளைவாக அந்நாட்டின் புதிய பிரதமராக நப்தாலி பென்னட் பதவியேற்றுள்ளார். மேலும் யெய்ர் லாப்பிட் என்பவர் இஸ்ரேல் நாட்டினுடைய வெளியுறவு துறை மந்திரியாக பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் வெளியுறவுத் துறையின் மந்திரி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அரசு சார்ந்த முறையாக 2 நாட்கள் பயணம் செய்யவுள்ளார்.
அந்த பயணத்தின் விளைவாக இஸ்ரேல் நாட்டிற்கும், ஐக்கிய அரபு அமீரகத்திற்குமிடையே பலவிதமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இஸ்ரேல் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியின் 2 நாள் பயணத்தின் போது அவர் துபாயிலும், அபுதாபியிலும் இஸ்ரேலிய நாட்டினுடைய தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார்.