தலிபான் பயங்கரவாதிகள் கைப்பற்றிய ஆப்கன் நாட்டில் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற 33 வயதாகும் இளம் மருத்துவரை தலிபான்கள் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ஆப்கன் நாட்டில் அமைந்துள்ள ஹெராத் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகள் சோதனைச் சாவடி அமைத்து அவ்வழியாக செல்லும் வாகனங்களை பரிசோதனை செய்துள்ளார்கள்.
அப்பொழுது அங்கு வந்த சமீபத்தில் திருமணம் முடிந்த 33 வயதாகும் இளம் மருத்துவர் ஒருவர் தலிபான்கள் அமைத்துள்ள சோதனைச்சாவடியில் நிற்காமல் சென்றுள்ளார். ஆகையினால் தலிபான்கள் சோதனைச் சாவடியில் நிற்காமல் சென்ற 33 வயதாகும் மருத்துவரை சுட்டுக் கொன்றுள்ளார்கள்.