இஸ்ரேலின் தலைநகரில் யூத இனத்தை சேர்ந்தவரை கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற இளைஞனை அந்நாட்டின் காவல்துறை அதிகாரிகள் நடுரோட்டில் வைத்து சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேம் உள்ளது. இந்த ஜெருசலேமில் வைத்து யூத இனத்தவரை பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கத்தியைக் கொண்டு சரமாரியாக தாக்கியுள்ளார். அதோடு மட்டுமின்றி பாலஸ்தீன இளைஞர் யூத இனத்தவரை கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்லவும் முயன்றுள்ளார்.
அந்த சமயம் அங்கிருந்த இஸ்ரேல் காவல்துறை அதிகாரிகள் யூத இனத்தவரை கத்தியைக் கொண்டு தாக்கிவிட்டு தப்ப முயன்ற பாலஸ்தீன இளைஞரை நடுரோட்டில் வைத்து சரமாரியாக சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இஸ்ரேல் காவல்துறை அதிகாரிகளின் இந்த செயலுக்கு பல தரப்பினரும் தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.