சாம்பாருக்கு முக்கியமானது சுவையும் மணமும் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளதுபோல செய்துபாருங்கள் ரொம்ப சுவையாக மணமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
கடுகு உளுந்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்
வெந்தயம் – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் -2
சின்ன வெங்காயம் – 12
பூண்டு – 10 பல்
தக்காளி – 1
கேரட் – 2
முருங்கைக்காய் – 1
பீன்ஸ் – 4
புளி – எலுமிச்சை பழ அளவு
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
மல்லி தூள் – அரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
சாம்பார் பொடி – ஒரு ஸ்பூன்
வெல்லம் – அரை டீஸ்பூன்
துவரம் பருப்பு – 200 கிராம்
சிறுபருப்பு – 100 கிராம்
கொத்தமல்லி தழை – சிறிதளவு
கறிவேப்பில்லை – சிறிதளவு
செய்முறை:
முதலில் பருப்பை நன்றாகக் கழுவி வேகவைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், சீரகம், கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். இவை நன்றாக பொரிந்ததும் பச்சை மிளகாயை இரண்டாக கீறி போடுங்கள். பின்னர் உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, தக்காளி சேர்த்து வதக்குங்கள். இதோடு நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகள் அனைத்தையும் சேர்த்து வதக்குங்கள். காய்கறி நன்றாக வதங்கி வரும் பொழுது, கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை இதோடு ஊற்றி கொள்ளவும்.
கொதித்து வரும் பொழுது மஞ்சள் பொடி, மல்லிப்பொடி, சாம்பார் பொடி, வத்தல் பொடி, உப்பு, ஒரு ஸ்பூன் அளவிற்கு வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள். வெல்லம் சேர்ப்பதால் நல்ல ருசி கிடைக்கும். வேகவைத்து வைத்திருக்கும் பருப்பை இதோடு ஊற்றி ஊற்றுங்கள். ஒரு பத்து நிமிடம் நன்றாக கொதிக்கவிடுங்கள். கொதித்ததும் அதில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்ளுங்கள். நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லித் தழை தூவி இறக்கி விடுங்கள். சாதத்தோடு ஊற்றி சாப்பிடும் பொழுது அம்புட்டு ருசி..!