சுவாமி கழுத்தில் இருந்த நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டத்திலுள்ள பூலாப்பட்டி ஆற்றங்கரையில் சிவன் மற்றும் முருகன் கோவில் இருக்கிறது. இங்கு பூசாரி வழக்கம்போல் பூஜையை முடித்துவிட்டு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இதனையடுத்து மறுநாள் காலையில் பொதுமக்கள் கோவிலுக்குச் சென்றபோது கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அதன்பின் பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தபோது சுவாமி கழுத்தில் இருந்த தங்க நகை, உண்டியல் பணம் மற்றும் கோவில் வளாகத்தில் இருந்த 3 வெண்கல மணிகள் போன்ற பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.