பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நேற்று சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. அந்த வழிபாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக பக்தர்கள் கலந்து கொள்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுன சாமி கோவிலில் சனிக்கிழமை பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி மற்றும் சாமிக்கு பழங்கள் போன்ற பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
இதேபோன்று குமாரசாமிபேட்டை சிவகாமசுந்தரி உடனாகிய ஆனந்த நடராஜர் கோவில், நெசவாளர் நகர் மங்களாம்பிகை உடனாகிய மகாலிங்கேஸ்வரர் கோவில், கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் உடனாகிய மருதவானேஸ்வரர் கோவில், ஹரிஹர நாத சாமி கோவில், சவுளுப்பட்டி ஆதி லிங்கேஸ்வரர் கோவில், அன்னசாகரம் சிவன் கோவில், மதிகோன்பாளையம் சிவன் கோவில், ஆற்று மேட்டில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவில் போன்ற அனைத்து சிவன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. ஆனால் ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.