சுவரில் துளையிட்டு மதுபாட்டில்கள் திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மேலஉளூர் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான மதுபான கடை ஒன்று இருக்கின்றது. இந்த கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்து 30 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்களை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து மதுபான கடையின் மேற்பார்வையாளர் குமார் கொடுத்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.