வீட்டிலேயே செய்யக்கூடிய, சுவையான மொறு மொறு பக்கோடா:
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் – 7
பெருசீரகம் – 2 டீஸ்பூன்
பூண்டு – 1
இஞ்சி – ஒரு சீனா துண்டு
பட்டை – ஒரு சின்ன துண்டு
அரிசிமாவு – ஒரு கப்
கடலைமாவு – ஒரு கப்
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 4
நல்லஎண்ணெய் – 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
செய்முறை:
பெருஞ்சீரகம், மிளகாய், பூண்டு, இஞ்சி, பட்டை இவை அனைத்தையும் ஒன்னு, ரெண்டாக மிக்ஸர் ல அரைத்து கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் அரிசி மாவு, கடலை மாவு ஒன்றாக போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவேண்டும்.
பின்னர் அதனுடன் பெரியவெங்காயம் நறுக்கி வைத்திருக்க வேண்டும் , அதை மாவில் போட்டு நன்றாக பிசைய வேண்டும். வெங்காயத்தில் உள்ள நீர் மாவில் இறங்கும்.
அதன் கூட கொஞ்சம் நல்லஎண்ணெய் ஊத்தி பிசைந்து கொள்ளவேண்டும். உப்பு தேவையான அளவு போட்டு கொள்ள வேண்டும். அத்துனுடன் நாம் அரைத்து வைத்திருக்கும் விழுதையும் போட்டு நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
எல்லாம் ஒன்றாக கலவையாக சேரும்வரை நன்றாக பிசைந்து ஒரு 5 நிமிடம் அப்படியே வைத்து கொள்ளுங்கள். பின்னர் அதை எண்ணெயில் போட்டு உதிரி உதிரியாக எடுத்து ஆரவச்சி சாப்பிடுங்கள்.
ஒரு வாரத்திற்கும் கெடாமல் மொறு மொறுனு சுவையாக இருக்கும். உங்களுக்காக ருசியான மொறு மொறு பக்கோடா….