Categories
டென்னிஸ் விளையாட்டு

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன்… இறுதி போட்டிக்கு முன்னேறிய பிவி சிந்து… அசத்தல்…!!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த பிவி சிந்து முன்னேறியுள்ளார்.
சுவிட்சர்லாந்தில் சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடர் நடைப்பெற்று வருகின்றது . அதன்படி  இந்தியாவில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றில் பி. வி. சிந்து, டேனிஷ் நாட்டின் மியா  பிளிச்ஃபெல்ட்டை எதிர்கொண்டுள்ளார். இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய சிந்து, முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.

அதனைத்  தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் செட்டியிலும் சிறப்பாக செயல்பட்ட சிந்து 20-10 என்ற கணக்கில் அந்த செட்டையும் கைப்பற்றி பிலிப்ஸ் பெல்ட்டிற்கு  அதிர்ச்சி அளித்துள்ளார். அதன்மூலம் பிவி சிந்து மியா பிளிச்ஃபெல்ட்டை வீழ்த்தி சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அனைவரையும் அசத்தியுள்ளார். இதன்பின் ஒலிம்பிக் சாம்பியனான ஸ்பெயினின் கரோலினா மரியனுடன்  இறுதிப்போட்டியில் மோதி உள்ளார் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |