ரவையை பயன்படுத்தி சுவையான குலோப்ஜாமுன் செய்யலாம்…
தேவையான பொருட்கள்:
சர்க்கரை -2 கப்
ரவை -1 கப்
நெய்
ஏலக்காய் பொடி-சிறிதளவு
பால் -3 கப்
தண்ணீர் -தேவையான அளவு
செய்முறை:
முதலில் சர்க்கரை பாகு செய்ய 3 கப் அளவிற்கு தண்ணீரில் 2 கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும் . சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து பாகு பதம் வந்ததும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.
ஒரு வாணலியில் ஒரு கப் அளவிற்கு ரவையை ஒரு ஸ்பூன் அளவுக்கு நெய் சேர்த்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து வறுக்கவும். அதே சமயத்தில் ரவையின் நிறம் மாறிவிடக் கூடாது. இதில் மூன்று கப் அளவிற்கு பால்,2 டேபிள் ஸ்பூன் அளவுக்கு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி கொள்ளலாம். மிதமான வெப்பத்தில் 6 நிமிடம் வேக வைக்கவும். நன்கு வெந்த பிறகு சிறிதுநேரம் ஆறவிடவும். பின்பு மிருதுவான பதம் வரும்வரை நன்கு அழுத்தி பிசைந்துவிடுங்கள்.