வரலாற்றை மறைத்து விட முடியாது என நடிகரும் பாஜகவை சேர்ந்தவருமான எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு பாஜக சார்பில் எஸ்.வி.சேகர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் ரஜினி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது இதற்கு பதிலளித்த இவர் கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு என தெரிவித்ததோடு எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு, ரஜினி ஆற்றியது எதிர்வினையே தவிர அவர் ஒன்றும் தவறாக சொல்லவில்லை. அனைத்திற்கும் ஒரு சரித்திர இருப்பதாகவும் சரித்திரத்தை யாராலும் மறைத்துவிட முடியாது என எனவும் கூறினார்.